காணொளி: நீலகிரியில் கார், பைக்குகளை சேதப்படுத்திய காட்டெருமைகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நீலகிரியில் கார், பைக்குகளை சேதப்படுத்திய காட்டெருமைகள்
பிரசுரிக்கப்பட்டது

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கைகாட்டி கிராமத்திற்குள் இன்று அதிகாலை மூன்று ஆண் காட்டெருமைகள் நுழைந்தன.

அப்போது, அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தின. இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றுகூடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமைகளை தேயிலைத் தோட்டத்திற்குள் விரட்டினர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் சேதமடைந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு