காணொளி: காலை உணவு விரிவாக்க திட்டம் - மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்

காணொளிக் குறிப்பு, விஜய்
காணொளி: காலை உணவு விரிவாக்க திட்டம் - மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை முதல்வர் விஜய் சென்னையில் இன்று (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு