'வெள்ளை மாளிகையில் சி.என்.என், எம்.எஸ்.நௌ செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
'வெள்ளை மாளிகையில் சி.என்.என், எம்.எஸ்.நௌ செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடகங்களை வெள்ளை மாளிகைக்குள் "உடனடியாக" தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் எழுதிய ஒரு பதிவில், அந்த ஊடகங்கள் தனது நிர்வாகத்தைப் பற்றி "தொடர்ந்து புனைக்கதைகளையோ அல்லது பொய்களையோ எழுதுகின்றன அல்லது வெளியிடுகின்றன" என்று குறிப்பிட்டுருந்தார். இருப்பினும் அவர் அதற்கான எந்த உதாரணங்களையும் வழங்கவில்லை.

இந்தத் தடை எதைக் குறிக்கும் என்பதும், அந்த ஊடகங்களின் ஊழியர்கள் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்படுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் பத்திரிகை சுதந்திர அமைப்புகளிடமிருந்து சட்டரீதியான சவால்கள் வரலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு