காணொளி: அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நகர்ப்புற வீட்டை ‘காடு போல’ மாற்றிய மகன்
பாகிஸ்தானைச் சேர்ந்த மியான் அஸ்கர் அலி, வீட்டில் 5,700-க்கும் மேற்பட்ட செடிகளை நட்டு, தனது வீட்டை ஒரு செழிப்பான நகர்ப்புறக் காடாக மாற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியாகத் தொடங்கிய இது, ஒரு குறிப்பிடத்தக்க பசுமைத் திட்டமாக வளர்ந்துள்ளது.
இந்த முயற்சிக்கு இதுவரை 40 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ள அவர், தற்போது இதைப் பராமரிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் 30,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு மேல் செலவிடுகிறார். 10,000 செடிகளை வளர்த்து, கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடிப்பதே அவரது அடுத்த இலக்காகும்.
“என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, சுவர்கள், படிக்கட்டுகள் மற்றும் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செடிகளை வைக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில், என்னைவிட ஒரு பெரிய முட்டாள் இருக்க முடியாது என்று மக்கள் கூறுவார்கள்.”
“இன்று எங்கள் வீட்டுக்கு வருபவர்கள், வீட்டைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மற்றவர்கள் வீடுகளைக் கட்டியுள்ளனர், நாங்களோ எங்களுக்கான ஒரு சிறிய சரணாலயத்தை உருவாக்கியுள்ளோம். இதன் காரணமாக, மக்கள் எங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள்.” என்கிறார் மியான் அஸ்கர் அலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



