காணொளி: ‘நீதிமன்றத்தை நாடுவோம்’ - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
காணொளி: ‘நீதிமன்றத்தை நாடுவோம்’ - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும் என்ன பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



