காணொளி: மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? - அமைச்சர் விளக்கம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? - அமைச்சர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறி தமிழ் ஓதுவார்கள் சிலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளே அனுமதிக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியிருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளே அழைத்து சென்று, யாகசாலையில் தமிழ் ஓதுவார்கள் பங்கேற்று உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இதுகுறித்து விளக்கமளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு