'பாரதிதாசனின் படிப்பு தொடர அரசு உதவும்' - வன்னி அரசு
மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், மலேசியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியா பல்கலைக்கழகத்தில், 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' கீழ் பி எச் டி. பயின்று வருகிறார்.
இந்நிலையில், இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்காததால், பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னை வெளியேற்றும் அபாயம் உள்ளதாகக் கூறி மாணவர் பாரதிதாசன் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்ததுடன், மாணவருக்கான உதவித்தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதற்கிடையே, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மாணவர் பாரதிதாசனின் படிப்பு தொடர அரசு அனைத்து வகையிலும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டுக்கான உதவித்தொகை அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள தொகை ஓரிரு நாட்களில் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



