'சீனா தரப்பு தகவல் வேண்டும்' - நேபாளம் சென்றவர்களின் குடும்பத்தினர்

காணொளிக் குறிப்பு,
'சீனா தரப்பு தகவல் வேண்டும்' - நேபாளம் சென்றவர்களின் குடும்பத்தினர்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் கடந்த மாத இறுதியில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்ற 49 பேரின் நிலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலக வளாகத்தில் நேற்று அவர்கள் திரண்டனர். இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் இதுவரை தங்கள் குடும்பத்தினர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கூறிய அவர்கள், நேபாள தரப்பு தகவல் மட்டுமே கிடைத்துள்ளது, சீன தரப்பு தகவல்கள் வேன்டும், அங்கு தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு