காணொளி: சட்டத்தடையை மீறி பைக் ஓட்டும் இரானிய பெண்கள்
சட்டத் தடைகளை மீறி இரானிய பெண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர். இரானில் அதற்கு இன்னும் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும் கூட அதிகளவிலான பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றனர்.
இரானிய ஊடகங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெண்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களில் பயணிகள் பின்னால் அமர்ந்து பயணிக்க பெண்களுக்கு அனுமதி உண்டு.
பெண்கள் மற்றும் குடும்ப நல விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ஜஹ்ரா பெஹ்ரூஸ்-அசார் (Zahra Behrouz-Azar), 'நீங்கள் ஓட்ட முடியாது, ஆனால் மற்றொருவர் பின்னால் அமர்ந்து கொள்ளலாம்' என்று கூறுவது தவறு. அவர் கணவராக இருந்தாலும் சரி அல்லது நெருங்கிய ஆண் உறவினராக இருந்தாலும் சரி. இது ஒரு தெளிவான இரட்டை நிலைப்பாடு" என்றார்.
ஜனவரியில் அரசாங்கம் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. அது பெண்கள் மோட்டார் சைக்கிள் உரிமம் பெற அனுமதிக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சாலைகளில் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.ஆனால் பல பெண்கள் மனம் தளரவில்லை.ந்விரைவில் உரிமங்கள் வழங்கப்படும் என்று நம்புகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



