காணொளி: ராணுவ விமானத்தால் முகம் சுளித்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ராணுவ விமானத்தால் முகம் சுளித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவிற்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கும் நிகழ்வின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு டொனால்ட் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்காவின் இரண்டு பி-1 ராணுவ விமானங்கள் வானில் பறந்து சென்றன. விமானங்கள் மிகக் கடுமையான சத்தத்துடன் தலைவர்களின் தலைக்கு மேலே கடந்து சென்றபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ மரியாதை செலுத்தியபடி நின்றிருந்தார் அப்போது திடீரென ஏற்பட்ட அதிகப்படியான சத்தத்தால் நிலைதடுமாறிய டிரம்ப், பற்களைக் காட்டியபடி அசௌகரியமாக முகம் சுளித்து, ஷி ஜின்பிங்கின் பக்கமாகத் திரும்பினார். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு அருகில் நின்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் எந்தவித சலனமும் இன்றி, அமைதியாக நேராகப் பார்த்தபடி நின்றிருந்தார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு