காணொளி: தெருநாய்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் அவிழ்த்துவிட்டு நூதன போராட்டம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: தெருநாய்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் அவிழ்த்துவிட்டு நூதன போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி, பஞ்சாயத்து அலுவலக அதிகாரியின் மேசையில் தெருநாய்களை அவிழ்த்துவிட்டு போராட்டக்காரர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்திய காட்சி இது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் நகரில் தெருநாய்கள் தொல்லைக்கு எதிராக, பஞ்சாயத்து அலுவலகத்தில் சிவசேனா (UBT) சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் யுவசேனா மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தவே மற்றும் நகரசபை உறுப்பினர் ரூபாலி ரந்தவே ஆகியோர் தலைமை தாங்கினர்.

அப்போது போராட்டக்காரர்கள் திடீரென பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்து, அதிகாரி தீரஜ் பாம்ரேவின் மேசையில் தெருநாய்களை அவிழ்த்துவிட்டனர். மேலும், நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், தலைமை அதிகாரியின் மேசையில் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையையும் வைத்தனர்.

அப்பகுதியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலை தீவிரமடைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக நகர பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு