88 வயதில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஓய்வுபெற்ற ஆசிரியர்
88 வயதில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஓய்வுபெற்ற ஆசிரியர்
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாபை சேர்ந்த 88 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரபலமாகியுள்ளார். அவரது பேரன் அவரை வீடியோ எடுத்து முதன் முதலில் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அப்போதிலிருந்து அதில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்த அவர், தற்போது சமையல், வாழ்க்கை அனுபவம், இளைஞர்களின் பிரச்னை குறித்த தனது பார்வை என பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு இந்தியாவை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரும் வெளியீடு



