காணொளி: லண்டனில் முதல்வர் விஜயின் நிகழ்வு ரத்து - என்ன நடந்தது?
காணொளி: லண்டனில் முதல்வர் விஜயின் நிகழ்வு ரத்து - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்கே இப்பயணம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் மிக உயரமான கட்டடமான தி ஷார்ட் முன்பு, பொதுவெளியில் முதலமைச்சர் விஜய், பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பெருநகர காவல்துறை இதில் தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
தனது பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் 17ம் தேதி தமிழ்நாடு திரும்பவுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



