காணொளி: டிரோன் மூலம் யானைகளை வனத்துறை காட்டுக்குள் விரட்டிய காட்சி
காணொளி: டிரோன் மூலம் யானைகளை வனத்துறை காட்டுக்குள் விரட்டிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இரண்டு கும்கி யானைகள் மற்றும் தெர்மல் ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணியின்போது, ட்ரோன் சத்தத்தைக் கேட்டு ஊருக்குள் நுழைய முயற்சித்த யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்டுக்குள் திரும்பிச் சென்ற காட்சிகளை தெர்மல் ட்ரோன் கேமரா பதிவு செய்துள்ளது. இந்த காணொளியை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



