காணொளி: 30 ஆண்டுகளாக பாலே நடனமாடும் நங்கை

காணொளிக் குறிப்பு, காணொளி: 30 வருடங்களாக பாலே நடனமாடும் பெண்
காணொளி: 30 ஆண்டுகளாக பாலே நடனமாடும் நங்கை
பிரசுரிக்கப்பட்டது

மேரியானெலா அர்ஜென்டினாவில் தனது மூன்றாவது வயதில் நடனமாடத் தொடங்கினார். தற்போது 44 வயதாகும் அவர், லண்டனில் உள்ள தி ராயல் பாலேவில் முதன்மை நடனக் கலைஞராக உள்ளார்.

"இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், காலையில் எழுந்து, பாலே நடன வகுப்பில் கலந்துகொண்டு எப்படி இவ்வளவு ஆற்றலுடன் உணர்கிறேன் என்பதை இப்போது என்னால் விளக்க முடியாது" என்கிறார் அவர்.

இந்தத் துறையில் உள்ள அதிகப்படியான வேலைப்பளு மற்றும் உடல் ரீதியான சோர்வு காரணமாக, பல நடனக் கலைஞர்கள் 30 முதல் 40 வயதிற்குள் ஓய்வு பெறுகின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு