காணொளி: வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக உணவு சமைப்பது எப்படி?
உணவை பூச்சிகள், நோய்களைப் பரப்பக்கூடிய எலிகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்க, மூடி வைக்கக்கூடிய கொள்கலன்களைப் பயன்படுத்துங்கள்.
அரிசி, பருப்பு போன்ற உலர் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அல்லது நீர் புகாத கொள்கலன்களில் சேமியுங்கள். ஈரப்பதம் உள்ளே செல்வதைத் தவிர்க்க இது உதவும். ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதற்கு வழிவகுக்கும்.
இயன்றவரை அனைத்து உணவுப் பொருட்களையும் குளிர்ச்சியான, உலர்ந்த இடங்களில் வைத்திருங்கள்.
இறைச்சி மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை நன்றாக வேகவைத்து சமைக்கவும்.
அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட, மீதமுள்ள உணவை பாக்டீரியாக்களை கொல்லும் வகையில் நன்றாக மீண்டும் சூடுபடுத்துங்கள்.
பச்சை இறைச்சிக்குப் பயன்படுத்திய சமையலறை உபகரணங்களை சோப்பும் வெந்நீரும் கொண்டு நன்றாகக் கழுவுங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவ உப்பு கலந்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
அவற்றைச் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து உலர்த்துங்கள்.
வீங்கிய அல்லது சேதமடைந்த பொட்டலத்தில் உள்ள உணவைச் சாப்பிடவோ, அதிலுள்ள பானத்தைப் பருகவோ வேண்டாம்.
அது உணவு மாசடைந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய உணவை உட்கொள்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



