ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்

காணொளிக் குறிப்பு, ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்!
ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்
பிரசுரிக்கப்பட்டது

ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றிருக்கிறது இந்த சிப்பிப்பாறை நாய்!

திண்டுக்கல்–நத்தம் சாலையில் உள்ள அபிராமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர், இந்த சிப்பிப்பாறை நாயை வளர்த்து வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, சிறுமலை அடிவாரத்தில் இருந்து இந்த நாய் குட்டியை எடுத்து வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்.

ஏற்கெனவே, 2023ஆம் ஆண்டு இந்த நாய் 11 குட்டிகளை ஈன்றது.

இந்லையில், தற்போது 10 ஆண், 7 பெண் என மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது.

இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர், குட்டிகளை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இது பற்றி ஓய்வுப் பெற கால்நடை மருத்துவர் ஆசோகன் பிபிசி தமிழிடம் பேசும்போது, நாட்டு நாய்களில் இது அரிய நிகழ்வு என்றார்.

விரிவாக காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு