You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கணவர் இறந்த பிறகு குடும்ப கடன் தீர்க்க துணிந்து டிராக்டர் ஏறிய பெண்
டிராக்டர் ஓட்டிச் செல்பவர் சாந்தாபென் செங்கானி. இவர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலுள்ள மதாபார் கிராமத்தைச் சேர்ந்தவர். 2002ஆம் ஆண்டில் கணவரை இழந்த இவரும் இவரது குடும்பத்தினரும் தீவிரமான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டனர். இருப்பினும், சாந்தாபென் துவண்டுவிடாமல், விவசாயப் பணிகளை துணிச்சலுடன் மேற்கொள்ளத் தொடங்கினார். முதலில் இருசக்கர வாகனம் ஓட்டக் கற்ற அவர், மிகுந்த உறுதியுடன் டிராக்டர் ஓட்டுவதிலும் தேர்ச்சி பெற்றார்.
சாந்தாபென் பண்ணையை நிர்வகித்தது மட்டுமின்றி, தனது பிள்ளைகள் படித்து முன்னேறுவதையும் உறுதி செய்தார். இன்று, சிவில் இன்ஜினியரிங் படித்த அவரது மகன், அவருடன் விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
தனது பயணத்தில் சவால்கள் நிறைந்து இருந்ததாக சாந்தாபென் நினைவுகூர்ந்தார். சில நேரம், அவர் பலவீனமானவர் எனக் கருதி மக்கள் அலட்சியப்படுத்தியது உண்டு. ஆனால், அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை. இன்று, அவர் மன உறுதியின் அடையாளமாக, பலருக்கு உத்வேகம் அளிப்பவராகத் திகழ்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு