காணொளி: இலங்கையை திணற வைக்கும் கடும் மழை
காணொளி: இலங்கையை திணற வைக்கும் கடும் மழை
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதுடன், ஆற்று நீர் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குள் பிரவேசித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால், மகாவலி, களுகங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, கண்டி, நுவரெலியா, கேகாலை ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கையும் இரத்தினபுரி மாவட்டத்திற்குள் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



