You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பிறந்தநாளுக்காக சண்டை போட்டி நடத்திய டிரம்ப்
காணொளி: பிறந்தநாளுக்காக சண்டை போட்டி நடத்திய டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகை புல்வெளியில் UFC சண்டை போட்டியை நடத்தினார்.
இந்த நிகழ்வில் அழைப்பு பெற்ற சுமார் 4,300 பேர் பங்கேற்றனர்.
குறைவான விதிமுறைகளைக் கொண்ட இந்த கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் 14 வீரர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுபோன்ற நிகழ்வு அந்தக் கொண்டாட்டத்துக்கு பொருத்தமானதல்ல என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு