காணொளி: அமெரிக்காவின் நீர் விநியோக அமைப்புகளை இரான் ஹேக் செய்ததா?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவின் நீர் விநியோக அமைப்புகளை இரான் ஹேக் செய்ததா?
காணொளி: அமெரிக்காவின் நீர் விநியோக அமைப்புகளை இரான் ஹேக் செய்ததா?
பிரசுரிக்கப்பட்டது

ஜூலை மாத இறுதியில், அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நீர் விநியோக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, FBI ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், 7 மாகாணங்களில் இதேபோன்ற சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், நீர்வழங்கல் தொடர்பான பல செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சைபர் தாக்குதல்களில் இரானுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) விசாரித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது? உண்மையிலேயே இதற்கும் இரானுக்கும் தொடர்பு உள்ளதா?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு