You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: விஜய் ஆட்சிக்குப் பிறகு பரந்தூரில் என்ன நிலை? பிபிசி தமிழ் கள ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5,746.18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில்துறை அனுமதி அளித்திருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.
நிலங்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு 1,822.45 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இதையடுத்து, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு வட்டாட்சியர்கள், துணை தாசில்தார்கள் உள்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர்.
தவெக அரசு அமைந்த பிறகு பரந்தூர் விமான நிலையத்தின் நிலை என்ன? பரந்தூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்? பிபிசி தமிழ் நடத்திய கள ஆய்வை விரிவாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு