காணொளி: ‘உள்ளே சோகம்... வெளியே மகிழ்ச்சி’- ஸ்மைலிங் டிப்ரஷன் அறிகுறிகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ‘உள்ளே சோகம்... வெளியே மகிழ்ச்சி’- ஸ்மைலிங் டிப்ரஷன் அறிகுறிகள்
பிரசுரிக்கப்பட்டது

நீங்கள் வெளியில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்துவிட்டு உள்ளுக்குள் ஒரு வித மனச்சோர்வுடன் உணர்கிறீர்களா?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனநல ஆராய்ச்சியாளர், டாக்டர் ஒலிவியா ரீம்ஸ், உங்களுக்கு ஸ்மைலிங் டிப்ரஷன் உள்ளதா என்பதைக் கண்டறிய 3 வழிகளை சொல்கிறார்.

இந்த நிலைக்கு ஆளானவர்கள் எல்லாவற்றையும் பெற்றிருப்பதாகத் தோன்றலாம். அவர்களுக்கு ஒரு துணை, வேலை, குடும்பம் இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் நீங்கள் வேதனையாகவும், காலியாகவும் மனச்சோர்வுடனும் உணர்வீர்கள்.

  • முதல் அறிகுறி என்னவென்றால், வெளி உலகத்திற்கு மகிழ்ச்சியான முகமூடியை அணிந்துகொள்வீர்கள்.
  • இரண்டாவது அறிகுறி சோர்வு மற்றும் ஆற்றல் குறைவுடன் காணப்படுவது.
  • இந்த நிலையின் மூன்றாவது அறிகுறி பசியில் மாற்றங்களை அனுபவிப்பது.

இதில் இருந்து மீள்வதும் சாத்தியம்தான். ஒரு மருத்துவ நிபுணரிடம் பேசுவது உண்மையிலேயே உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதுகுறித்து விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு