You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உலகின் மிக உயரமான தேவாலயம் கட்டப்பட்டது எப்படி?
பார்சிலோனாவில் அமைந்துள்ள சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் உலகிலேயே மிக உயரமான தேவாலயமாக உயர்ந்து நிற்கிறது. இது, பண்டைய கட்டடக் கலை மற்றும் 21ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை இணைத்துக் கட்டப்பட்டது.
இதனை கனவு கண்ட கட்டடக் கலைஞர் ஆண்டனி கௌடி இறந்து 100 ஆண்டுகள் கழித்து இந்த மிக உயரமான கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கௌடி தனது காலத்தில் தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட வெளிப்புற தாங்கு அமைப்புகளை பயன்படுத்த விரும்பவில்லை.
எனவே, அவர் சொந்தமாக வடிவமைக்க பழைய கட்டடக்கலை மரபுகளை நோக்கித் திரும்பினார்.
இராக்கில் உள்ள தாக்-கஸ்ரா ‘கேட்டினரி ஆர்ச்’ எனப்படும் வடிவமைப்புக்கு பழமையான உதாரணமாக திகழ்கிறது.
இது தலைகீழாகத் தொங்கும் சங்கிலியின் வடிவத்தைப் பின்பற்றுவதால், மிகவும் நிலையானதாக உள்ளது.
இதைச் சரிவர செய்தால், சாக்ரடா ஃபேமிலியாவின் 18 கோபுரங்களும் தங்களைத் தாங்களே தாங்கிக்கொள்ள முடியும்.
காலப்போக்கில், கௌடி அந்த வடிவமைப்பை மேலும் செம்மைப்படுத்தினார்.
அவரது இறுதித் திட்டங்களில், மரங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் செதுக்கப்பட்ட எளிமையான தூண்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் கிளைகளை ஒத்த அமைப்புகள் மேலிருந்து வரும் எடையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த வடிவமைப்புக்கு உயிர் கொடுப்பது எளிதாக இருக்கவில்லை. கௌடியின் மாதிரிகள் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் அழிக்கப்பட்டன. மிக உயரமான கோபுரங்கள் அவற்றின் அடித்தளங்களைத் தாங்க முடியாத அளவுக்குக் கனமாக இருந்தன.
எனவே, பொறியாளர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கினர். அதன்படி, உள்புறத்தில் பொருத்தப்பட்ட எஃகு இழைகளின் அழுத்தத்தின் உதவியுடன் மெல்லிய கல் பலகைகளைப் பயன்படுத்த முடிந்தது.
இதனால், அந்தக் கோபுரங்கள் எடை குறைந்தவையாக அமைந்ததுடன், காற்றின் தாக்கத்தையும் சிறப்பாகத் தாங்கக்கூடியவையாக மாறின.
கௌடி கற்பனைக்கூட செய்திருக்க முடியாத நவீன தொழில்நுட்பங்கள், அவரது கனவுத் திட்டத்தை நனவாக்குவதற்காக இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு