காணொளி: ஆற்றில் சிக்கிய எருமைகள் கயிறு கட்டி மீட்பு

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஆற்றில் சிக்கிய எருமைகள் கயிறு கட்டி மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட எருமைகள் கனரக இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

சுரேந்திரநகர் மாவட்டத்தின் ஜோராவர்நகர் அருகே ஓடும் போகாவோ ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், சுமார் 30 எருமைகள் ஆற்றுக்குள் சிக்கிக்கொண்டன.

அவற்றில் 28 எருமைகளை பாதுகாப்பாக மீட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு