காணொளி: உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்தும் டால்பின்
காணொளி: உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்தும் டால்பின்
பிரசுரிக்கப்பட்டது
தனது குட்டியை இழந்த துயரத்தில் இருந்த ஒரு தாய் டால்பின், உயிரிழந்த தனது குட்டியை பல நாட்கள் சுமந்தபடியே நீந்தியது.
ஃப்ராகிள் என்ற இந்த டால்பின், இதற்கு முன்பும் தனது கடைசி நான்கு குட்டிகளையும் இழந்துள்ளது.
இந்த காட்சிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியாவின் இலாப நோக்கமற்ற அமைப்பான ஜியோகிரபிக் மெரைன் ரிசர்ச்சின் தகவலின்படி, குட்டி டால்பின் மிக வேகமாக சுவாசித்தது. அது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்ததற்கான அறிகுறியாகும்.
குளிர்காலத்தில் குட்டி ஈன்ற டால்பின்களுக்கு, அந்தக் குட்டி உயிருடன் வாழ்வது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



