காணொளி: சேதமடைந்த விமான மேற்கூரை - பதறிய பயணிகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: சேதமடைந்த விமான மேற்கூரை - பதறிய பயணிகள்
காணொளி: சேதமடைந்த விமான மேற்கூரை - பதறிய பயணிகள்
பிரசுரிக்கப்பட்டது

விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது விமானத்தின் மேற்கூரை சேதமடைய, பயணிகள் பதறினர். இரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் டயர் வெடித்து, என்ஜினும் சேதமடைந்ததால் மீண்டும் மஷ்ஹத் விமான நிலையத்திற்கு அவசரமாக திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பின்னர் கெர்மான்ஷா நகருக்கு வேறு ஒரு விமானத்தில் அனுப்பப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு