பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 46வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (மே 3) பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அஹமதாபாத்தில் நடக்கிறது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 9 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் 5வது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது. அந்த அணியில் ஜேவியர் பார்ட்லெட் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷாரூக் கானுக்குப் பதிலாக நிஷாந்த் சிந்து சேர்க்கப்பட்டார்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். கடந்த சில போட்டிகளில் நாங்கள் இலக்கை சிறப்பாக விரட்டி வருகிறோம், அதேபோல் எங்கள் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. எனவே அந்த வேகத்தைத் தொடர விரும்புகிறோம். நடுத்தர வரிசை பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது பற்றி நாங்கள் பேசினோம், ராகுல் திவேதியா அதைச் செய்த விதம் அற்புதம். ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இங்கு உள்ளது. சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே முக்கியம், அதை நாங்கள் செய்து வருகிறோம். எங்களின் மிகச்சிறந்த ஆட்டம் இன்னும் வர வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்." என்று கூறினார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், "இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஆடுகளத்தில் சிறிது புற்கள் உள்ளன, மேலும் இது அதிகம் களிமண் கொண்ட ஆடுகளம் என்பதால் பந்து சற்று கூடுதலாக எகிறக்கூடும் என்று நினைக்கிறேன். இது சற்றே வழக்கத்திற்கு மாறானது தான், இருந்தாலும் இதற்கு முன்பும் நாங்கள் இந்த ஆடுகளத்தில் விளையாடியிருக்கிறோம், ஆனால் இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது." என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் நிஷாந்த் சிந்து சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், அர்ஷத் கான், மானவ் சூதர், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கிளென் ஃபிலிப்ஸ், ராகுல் திவேதியா, அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, குல்வந்த் கெஜ்ரோலியா.

பஞ்சாப் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் மீண்டும் ஜேவியர் பார்ட்லெட் இடம்பெற்றார். அவர் லாக்கி ஃபெர்குசனுக்குப் பதில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சூர்யான்ஷ் ஷெட்கே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், வைஷாக் விஜயகுமார், மிட்செல் ஓவன், விஷ்ணு வினோத்.