டிரம்பின் போர் நிறுத்தத்தை 'பயனற்றது' என விமர்சித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர்

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
இரானிய நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர், போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் புதிய அறிவிப்பு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபின் ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி, டிரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பு "பயனற்றது" என்று கூறியுள்ளார்.
"தோற்கும் தரப்பு நிபந்தனைகளை விதிக்க முடியாது. முற்றுகையைத் தொடர்வது குண்டுவீச்சிலிருந்து வேறுபட்டதல்ல, அதற்கு ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கப்பட வேண்டும்," என்று மஹ்தி மொஹம்மதி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "திடீர் தாக்குதலுக்குத் தயாராவதற்காக டிரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ளார். இப்போது இரான் முன்முயற்சி எடுக்க வேண்டிய நேரம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 22 அன்று போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் தன்னிடம் இதைக் கோரியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

















