பிபிசி தமிழின் இந்த வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ! #BBCTamilPhotoContest

26ஆவது வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ!

பட மூலாதாரம், greenaperture

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே!

புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?

ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில் புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைத்தள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.

26ஆவது வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ!

பட மூலாதாரம், GCShutter

புகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.

மற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.

மேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.

புகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

நீங்கள் அனுப்பும் படத்தின் அளவு ஒரு எம்பி-ஐ (1 MB) விடவும் குறைவாக இருக்க வேண்டும்.

26ஆவது வாரப் புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ!

பட மூலாதாரம், Ababsolutum

இந்த வாரத் தலைப்பு

27ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: "உழைப்பு"

தலைப்பை பிரதிபலிக்கும் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: