இந்தியா போன்ற நாடுகள் அந்நியச் செலாவணியை வைத்திருப்பது ஏன் முக்கியம்?

அந்நியச் செலாவணி கையிருப்பு, பணப் பரிமாற்றம், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், ஏற்றுமதி, இறக்குமதி, அமெரிக்கா, வரிவிதிப்பு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா ஒரு வலுவான நிலையை அடைய, அதன் அந்நியச் செலாவணிக் கையிருப்பை குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவிடம் 690 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. அதாவது ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய இன்னும் 310 பில்லியன் டாலர்கள் குறைவாக உள்ளது.

"குறிப்பாகச் சந்தை நிலையை கருத்தில் கொள்ளும்போது, ​​அந்நியச் செலாவணி கையிருப்பின் அளவு மிகவும் முக்கியமானதாகும்" என்று இந்த ஆண்டு மார்ச் 16 அன்று 'பேசிஸ் பாயிண்ட்' இதழில் வெளியான ஒரு கட்டுரையில் பத்ரா எழுதியுள்ளார்.

"இதில் சுமார் 350 பில்லியன் டாலர்கள், ஓராண்டிற்குள் செலுத்த வேண்டிய அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் ஈடுகட்டத் தேவைப்படும். மீதமுள்ள 650 பில்லியன் டாலர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறும் பட்சத்தில், ஒரு பாதுகாப்பு அரணாக செயல்பட தேவைப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

''இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கு குறைந்தது 1 டிரில்லியன் டாலராக இருக்க வேண்டும். 'குறைந்தது' என்று குறிப்பிட்டதற்கான காரணம் என்னவென்றால், அந்த கையிருப்பில் எவ்வளவு தொகை உண்மையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய நிலையில் கிடைக்கும் என்பதையும் நாம் கணக்கிட வேண்டியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

இரானில் நிலவும் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், எண்ணெய் இறக்குமதியையே பெரிதும் சார்ந்திருக்கும் இந்தியாவைப் போன்ற பொருளாதாரங்களின் மீதான அழுத்தம் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக, ரூபாயின் மதிப்பு சரிவடைந்து, இதுவரை இல்லாத அளவிற்குக் குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளது.

தற்போது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 95 ரூபாயைத் தாண்டியுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு, பணப் பரிமாற்றம், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், ஏற்றுமதி, இறக்குமதி, அமெரிக்கா, வரிவிதிப்பு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகிலேயே சீனாவிடம்தான் அதிகபட்ச அந்நியச் செலாவணி இருப்பு உள்ளது

அமெரிக்க டாலரின் ஆதிக்கம்

உலக நாடுகள் பொதுவாக தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை அமெரிக்க டாலர் வடிவிலேயே வைத்துள்ளன.

இறக்குமதிக்கான பணத்தை செலுத்துவதற்கோ அல்லது தனது சொந்த நாணயத்திற்கு ஆதரவு அளிப்பதற்கோ அந்நியச் செலாவணி கையிருப்பை வைத்திருக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இல்லை.

இந்தக் காரணத்தினால் தான், மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறுவதில்லை. ஏனெனில், அமெரிக்காவே தனது நாணயமான டாலரை அச்சிட்டு வெளியிடுகிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பு, பணப் பரிமாற்றம், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், ஏற்றுமதி, இறக்குமதி, அமெரிக்கா, வரிவிதிப்பு, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா, மிக உயர்ந்த அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டுள்ளது

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை சம்பாதிக்கின்றன. அதன் வாயிலாகத் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பை உருவாக்குகின்றன. ஆனால், அமெரிக்க டாலர் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதால், மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பைச் சேர்த்துவைக்க வேண்டிய அதே கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்படுவதில்லை.

அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருப்பதற்குப் பதிலாக, முக்கியமான ஒரு உத்திசார் பாதுகாப்பு அரணாக, அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய தங்கக் கையிருப்பைத் தன்வசம் வைத்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் கடன்கள் அனைத்தும் அதன் சொந்த நாணயமான டாலரிலேயே கணக்கிடப்படுகின்றன. இதன் விளைவாக, தங்கள் அந்நியக் கடன்களைத் தீர்க்க டாலர் கையிருப்பு தேவைப்படும் பிற நாடுகளைப் போலன்றி, அமெரிக்கா தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை, அந்நியச் செலாவணி கையிருப்பு, பணப் பரிமாற்றம், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், ஏற்றுமதி, இறக்குமதி, அமெரிக்கா, வரிவிதிப்பு, அமெரிக்கா

பட மூலாதாரம், IAN FORSYTH/GETTY IMAGES

அந்நியச் செலாவணி கையிருப்புகள் ஏன் முக்கியமானவை?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை அளவிடும் முக்கியமான அளவுகோல்களில் ஒன்று, அதன் மத்திய வங்கி வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்புகளின் அளவாகும்.

உலகளாவிய அந்நியச் செலாவணி கையிருப்புகளில் அமெரிக்க டாலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, மற்றும் சீனாவின் யுவான் ஆகியவை அடங்கும்.

உண்மையில், சர்வதேச வர்த்தகம் பெரும்பாலும் இந்த நாணயங்களில்தான் நடைபெறுகிறது. அதாவது, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கும்போது, தனது சொந்த நாணயமான ரூபாயில் அல்லாமல், டாலர்களில் பணம் செலுத்த வேண்டும். பல நாடுகள் யூரோ மற்றும் யுவானையும் ஏற்றுக்கொள்கின்றன.

இந்தியா பொருட்களை வாங்கும் போது, டாலர்களில் பணம் செலுத்துகிறது; பொருட்களை விற்கும் போது, டாலர்களைப் பெறுகிறது. இதன் பொருள், நீங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்தால் அதிக டாலர்கள் கிடைக்கும்; அதிகமாக இறக்குமதி செய்தால் அதிக டாலர்களை செலவிட வேண்டி வரும்.

2025–26 நிதியாண்டில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 333.2 பில்லியன் டாலராக இருந்தது. இது, இந்தியாவின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதிகளை விட அதிகமாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா தனக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், அந்நியச் செலாவணி கையிருப்புகளின் கணிசமான பகுதி எண்ணெய்க்காகவே செலவிடப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து 34.68 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதத்தில், இது 25.05 பில்லியன் டாலராக இருந்தது.

ஜனவரி மாதத்தில், இறக்குமதிகள் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 19.2 சதவீதம் உயர்ந்து 71.24 பில்லியன் டாலரை எட்டியது. அதே வேளையில், ஏற்றுமதிகள் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ந்து 36.56 பில்லியன் டாலரை எட்டியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு